எப்போதோ எதோ ஒரு படம்தான் நம் படம் பார்த்து வீட்டுக்கு வந்தபின்னும் அதை பற்றியே நினைக்க தூண்டுவதுண்டு. அந்த கதாப்பாத்திரங்கள் மனதை விட்டு நகராது. அது போல சில படங்கள்.... சேது, சுப்ரமணியபுரம், பருத்திவீரன். இப்போது அந்த வரிசையில் மைனா. பதிவுலகதிலும் ஊடகத்திலும் நல்ல review கொடுததினாலேயே படத்துக்கு போனேன். படம் பார்த்து வரும்போது வாயடைத்து போய்விட்டேன். இந்த படம் பார்த்துவந்த பின்பும் அதன் காட்சிகளே என்கண்முன் வந்து போகின்றது. இது இப்படி ஆகியிருக்க கூடாதோ, அப்படி ஆகியிருக்க கூடாதோ என்று மனம் வேண்டுகிறது. அப்படி என்னை நினைக்க வைத்ததுதான் இயக்குனரின் திறமை என்று நினைக்கிறேன்.
படம் முழுக்க இயற்கையான மெல்லிய கதையோடு வரும் நகைச்சுவை. இதுதான் படத்துக்கு பெரிய பலமே. சில நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவுடன் வரும் தம்பி ராமையா இதில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இடைவேளையின் பொது வரும் இவர் அந்த படத்தின் முதுகெலும்பு என்றால் மிகையாகாது. பெரிய star value இல்லாத நடிகர்களை வைத்து ஒரு சிறந்த படம் எடக்க முடியும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.
பிரபு சாலமன் தன்னுடைய நான்காவது படத்தில்தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார். இந்த படத்திற்காக அவர் பெயர் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.
நல்ல படம் பார்க்க விரும்புவர்கள் பார்க்க வேண்டிய படம்.
Sunday, November 14, 2010
Sunday, October 24, 2010
நிர்வாகி
எந்த ஒரு கம்பெனியாயானாலும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்குக் கட்டுப்பட்டுதான் வேலை சேயை வேண்டியிருக்கிறது. பலர் கல்லூரி முடிந்தவுடன் சில பல கம்பெனிகளில் கீழ் நிலையில் வேலை செய்துவிட்டு, பின்பு படிபடியாக மேல்நிலைக்கு செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அவரவர் திறமைக்கேற்ப மெதுவாகவோ அல்லது வேகமாகவோ இந்த புரமோஷன் கிடைபதுண்டு. ஒரு அதிகாரியாவதற்கு மற்றும் சிலரை வைத்து வேலை வாங்கவும் சில தகுதிகள் தேவைபடுவதுண்டு. அவுற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1 . People care Skills
தனக்கு கீழ் வேலை செய்யும் ஒவ்வொருவரையும் நிர்வகிப்பதே இந்த திறமையாகும். மக்களை நிர்வகிப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. ஒவ்வருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். ஒவ்வருவரிடம் ஒவ்வொரு முறையில் பேச, வேலை வாங்க, தெரிந்திருக்க வேண்டும். திறமையானவர்களை ஊக்குவிக்கவும், திறமை குறைந்தவர்களுக்கு அந்த திறமையை வளர்த்துக்கொள்ள உதவவும் வேண்டும். பொதுவாக மேலதிகாரிகள் சந்திக்கும் பிரச்சனை, வருடா வருடம் நடக்கும் அப்பரைசல் எனப்படும் தகுதி அடிப்படையிலான சம்பளம் மறுநிர்ணயம் ஆகும். இச்சமயங்களில்தான் ஒரு நிர்வாகியின் திறமை வெளிப்படும்.
2 . Communication Skills
எவ்வளவு திறமைசாலியானாலும், இன்றைய காலகட்டத்தில் நல்ல பேச்சு மற்றும் எழுத்து திறமை உள்ளவரே முன்னேற முடியும். நிர்வாகியான ஒருவருக்கு ஒரு படி மேலான இந்த தகுதிகள் தேவைப்படுகின்றன. தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்துவிட்டால் அவற்றை சரி செய்துவிட்டு, கஷ்டமரிடம் அதை சாதுர்யமாக கையாளவும் தெரிந்துருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த தவறு மறுபடியும் நடக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3 . Financial Skills
இது ஏதோ கணக்கு வழக்கு சம்பதப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். நிர்வாகிகளுக்கும் இது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. வரவு செலவு இல்லாமல் எப்படி வீடு இல்லையோ அப்படியே அலுவலகமும்.
இது இல்லாமல் மேலும் பல தகுதிகளும் தேவைப்படுகின்றன. அவைகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.

Subscribe to:
Posts (Atom)