நினைத்தேன் எழுதுகிறேன்: October 2010

Sunday, October 24, 2010

நிர்வாகி

எந்த ஒரு கம்பெனியாயானாலும்  ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்குக் கட்டுப்பட்டுதான் வேலை சேயை வேண்டியிருக்கிறது. பலர் கல்லூரி முடிந்தவுடன் சில பல கம்பெனிகளில் கீழ் நிலையில் வேலை செய்துவிட்டு, பின்பு படிபடியாக மேல்நிலைக்கு செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அவரவர் திறமைக்கேற்ப மெதுவாகவோ அல்லது வேகமாகவோ இந்த புரமோஷன் கிடைபதுண்டு. ஒரு அதிகாரியாவதற்கு மற்றும் சிலரை வைத்து வேலை வாங்கவும் சில தகுதிகள் தேவைபடுவதுண்டு. அவுற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1 . People  care Skills
தனக்கு கீழ் வேலை செய்யும் ஒவ்வொருவரையும் நிர்வகிப்பதே இந்த திறமையாகும். மக்களை நிர்வகிப்பது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. ஒவ்வருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். ஒவ்வருவரிடம் ஒவ்வொரு முறையில் பேச, வேலை வாங்க, தெரிந்திருக்க வேண்டும். திறமையானவர்களை ஊக்குவிக்கவும், திறமை குறைந்தவர்களுக்கு அந்த திறமையை வளர்த்துக்கொள்ள உதவவும் வேண்டும். பொதுவாக மேலதிகாரிகள் சந்திக்கும் பிரச்சனை, வருடா வருடம் நடக்கும் அப்பரைசல் எனப்படும் தகுதி அடிப்படையிலான சம்பளம் மறுநிர்ணயம் ஆகும். இச்சமயங்களில்தான் ஒரு நிர்வாகியின் திறமை வெளிப்படும்.

2 . Communication Skills
எவ்வளவு திறமைசாலியானாலும், இன்றைய காலகட்டத்தில் நல்ல பேச்சு மற்றும் எழுத்து திறமை உள்ளவரே முன்னேற முடியும். நிர்வாகியான ஒருவருக்கு ஒரு படி மேலான இந்த தகுதிகள் தேவைப்படுகின்றன. தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் தவறு செய்துவிட்டால் அவற்றை சரி செய்துவிட்டு, கஷ்டமரிடம் அதை சாதுர்யமாக கையாளவும் தெரிந்துருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த தவறு மறுபடியும் நடக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3 . Financial Skills
இது ஏதோ கணக்கு வழக்கு சம்பதப்பட்டவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். நிர்வாகிகளுக்கும் இது மிக முக்கியமாக தேவைப்படுகிறது. வரவு செலவு இல்லாமல் எப்படி வீடு இல்லையோ அப்படியே அலுவலகமும்.

இது இல்லாமல் மேலும் பல தகுதிகளும் தேவைப்படுகின்றன. அவைகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.