நினைத்தேன் எழுதுகிறேன்: 2008

Monday, June 30, 2008

வீடு வாங்கலியோ வீடு

வீடு வாங்கலியோ வீடு.

கடந்த ஒரு வரமாகவே நிறைய குழம்பி போய்விட்டேன். இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருக்கிறது. வீடு பார்க்க வேண்டும். வாடகை வீடு பார்க்கலாமா இல்லை சொந்த வீடு வாங்கலாமா என்பது முதல் குழப்பம். சொந்த வீட வாங்க இது சரியான நேரமா என்பது இரண்டாவது குழப்பம். Real Estate Price எகிறிப் போய் நிற்கிறது. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து விலையெல்லாம் இறங்கும் என்று சொல்கிறார்கள். அப்படியே சொந்த வீடு வாங்கலாம் என்றாலும் எவ்வளவு Home Loan எடுப்பது, எவ்வளவு வருடம் எடுத்தால் நமக்கு லாபம் என்பது மூன்றாவது குழப்பம். சரி Loan எடுப்பதாகவே வைத்துக் கொண்டாலும், Bank 85% மேல தராது. சரி மீதிப் பணத்துக்கு எங்க போவது. கையில் இருப்பது காலணாவுக்கு போறாது. அதுவும் கூட பேங்க் -இல் தான் கடன் வாங்க வேண்டும். இப்படி ஏகப்பட்டது கடன் வாங்கினால் மாத வருமானத்தில் பெரும்பகுதி EMI கட்டவே போய் விடும், பின்ன குடும்பம் எப்படி செய்வது. இப்போது எவ்வளவு செலவாகிறது என்று தெரியல. கணக்கு எதுவும் பார்க்கவில்லை. ஆனால் கல்யாணத்துக்கு அப்பறம் இதைவிட இரண்டு மடங்கு செலவாகும். அதையும் யோசித்து பார்க்க வேண்டும். பணவீக்கம் நாளுக்கு நாள் மோசமா வீங்கிக் கொண்டே போகிறது.

வீடு பார்த்து முடிவு செய்வது என்பது சாதாரண விஷயமே இல்லை. நம் மனதில் ஆயிரம் இருக்கும். அத்தனையும் அந்த வீட்டில் இருக்காது. எதோ கொஞ்சமாவது சமரசம் செய்தாக வேண்டும். சில ஆண்டு முன்பு வரை Car Parking என்பது ஒரு அடம்பரமாகவேதான் காணப் பட்டது. அதனாலேயே பல அடுக்கு மாடி வீடுகள் Car Parking இல்லாமலேயே கட்டப் பட்டது. ஆனால் இன்று நிலைமை வேறு. Car Parking இல்லையென்றால் அந்த வீடு பாதி விலை தான் போகிறது. அதுவும் ஒரு வகையில் சரிதான். Car Parking இல்லையென்றால் Car -யை எங்குதான் நிறுத்துவது. "இப்போல்லாம் இது ஒரு பிரச்சனையே இல்ல சார். ரோட்டுல எவ்வளவு இடம் இருக்கு பாருங்க. இங்க நிறுத்திக்கலாம்." - வீட்டு புரோக்கர்கள் பொதுவாக சொல்லும் காரணம். வீடு அந்த தெருவில் கடைசி வீடாக இருந்தால் ரோட்டில் நிறுத்துவது பெரும்பாலும் ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் எங்காவது வெளியூர் போய்விட்டு நாலு நாள் கழித்து வந்து பார்த்தால், காரில் ஒரு சில spare parts மட்டுமே இருக்கும். சில இடங்களில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்னொரு பிரச்சனை, சென்னையை விட்டு வேறு இடத்துக்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்வது. இங்க வீட்டை சும்மா விட்டுவிட்டு போக முடியாது. வாடகைக்கும் தைரியமாக விட முடியாது. இது அடுத்த பிரச்சனை.

கடைசி மிக முக்கியமான பிரச்சனை, ஒருவேளை நான் பார்த்த வீடு என் மனைவிக்கு பிடிக்கலைன்னா? இது பெரிய பிரச்சனை. சரி, திருமணத்துக்கு அப்பறம் வீடு பார்த்துக்கலாம். ரெண்டு பெரும் சேர்த்தே வீடு பாக்க சுத்தலாம். இதில் இன்னொரு சவ்கரியம் இருக்கிறது. கல்யாணம் முடிஞ்சு எவ்வளவு பணம் கையில் இருக்கிறது, எவ்வளவு கடனில் இருக்கிறது, எவ்வளவு மாதம் செலவாகிறது, எவ்வளவு சேமிக்க முடிகிறது.. இவை எல்லாவற்றையும் கணக்கு பார்த்து அதுக்கு தகுந்தாற்போல ஒரு வீடு பார்த்துக்கலாம். குறைந்த பட்சம் நான் மட்டும் இப்படி மண்டையை போட்டு உடைத்துகே கொள்ள வேண்டாம். Share பண்ணிக்க ஒருத்தர் இருப்பாங்களே!

எனக்கு தெரிந்து என்னுடைய மிகப்பெரிய minus point, நானா எந்த பெரிய முடிவும் எடுக்காமல், பலபேரிடம் யோசனை கேட்டு, ஒவ்வொருத்தர் சொல்லும் யோசனைக்கும் தலையாட்டுவதுதான். ஒருவர் ஒரு கருத்தை சொல்லி முடித்த பிறகு என் மன நிலையும் அதுவாகவே மாறுகிறது. பிறகு வேறொருவர் ஒரு கருத்தை சொன்னவுடன், இது போய் புதிய மனநிலமைக்கு வந்து விடுகிறேன். என் நண்பர்கள் சில பேர் அவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பதை பார்க்கும் பொது எனக்கு பொறாமையை கூட இருக்கிறது. நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே என்று. I feel I am extremely volatile.

ஹ்ம்ம். இன்னைக்கு நாலு முழுக்க நல்லா குழம்பியாட்சி. வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் டைப் அடிச்சி கொட்டியாட்சு. இப்போ வேற எதையாவது நினைக்கலாம்.. சாரி குழம்பலாம்!!!!.

Sunday, June 15, 2008

பணவீக்கம்

நாட்டில் பணவீக்கம் 8.71% ஆக உயர்ந்து விட்டது. அது பற்றி யாருக்கும் கவலையில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒட்டு மட்டும்தான் முக்கியம். விவசாயிகளுக்கு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி. நல்ல விசயம்தான். ஆனால் இது பல சிக்கலை கொடுக்க வல்லது. இரண்டு பேர் ஒரே நேரத்தில் கடன் வாங்குகிறார்கள். ஒருவன் சரியாக பணத்தை திருப்பி கட்டி விடுகிறான். இன்னொருவன் வேண்டுமென்று கட்டாமல் இருக்கிறான். இந்த நேரத்தில் அரசு சலுகை அறிவிக்கிறது. இப்போது பணத்தை ஒழுங்காக திருப்பி கட்டியவன் ஏமாளி, முட்டாள் என்று முத்திரை குத்தப் படுகிறான். கட்டாதவன் புத்திசாலி. அடுத்த முறை கடன் வாங்குபோது, யாரவது திருப்பி கட்டுவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்? சரி இந்த பணத்தை வங்கிகளுக்கு திருப்பி கொடுக்க அரசு அதாவது திட்டம் வைத்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. 3 வருடத்துக்கு பாண்டு போட்டு தருவார்களாம். அதாவது கடன் பத்திரம். அதை ஏன் இவர்கள் நான்கு வருடம் ஆண்டு விட்டு இப்போது செய்தார்கள். ஏனென்றால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியுமா என்று தெரியாது. நாம் வந்தால் எப்படியாவது சமாளித்து மறுபடியும் ஒரு கடன் பத்திரம் கொடுத்து விடவேண்டியதுதான். பா.ஜ.கா. ஆட்சியை பிடித்தால் கடன் தொல்லை தாங்க முடியாமல் நாடு திவலாகட்டும். பா.ஜ.கா. வினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று பெசலாம். இப்படி பல திட்டம் போட்டு இந்த நாசகார வேலையை இந்த அரசு செய்து முடித்திருக்கிறது. இது மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் சேர்ந்து எடுத்த முடிவாக என்னால் நம்ப முடிய வில்லை. அவர்கள் இருவரும் பொருளாதார மேதைகள். அவர்கள் இதை செய்ய துணிந்திருக்க மாட்டார்கள். இது முழுக்க முழுக்க சோனியா அம்மையாரின் உபயம்.

இது மட்டுமல்ல இந்த விலைவாசி உயர்வுக்கும் பணவீக்கதிற்கும் காரணம். இந்த IT துறை ஒரு முக்கிய காரணம். மற்ற துறைகளில் பல வருடம் உழைத்த பிறகு கிடைக்கும் சம்பளம் இன்று சாப்ட்வேர் துறையில் காலேஜ் முடித்தவுடன் முதல் மாதமே கிடைக்கிறது. ஆனால் மாற்ற துறைகளில் இன்னும் சம்பள விகிதம் அப்படியேதான் இருக்கிறது. இந்த I T காரர்களால், மற்றவர்கள் நகர எல்லையில் கூட இருக்க முடிவதில்லை. வாடகை அந்த அளவுக்கு ஏறிப் போய்விட்டது. வீடு வாங்குவதென்பது பலருக்கு ஒரு கனவாகவே பொய் விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பலராலும் இது வானுயுரத்துக்கு போய்விட்டது.
ஆனால் அரசோ மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகமாக பொய் விட்டது. அதனால்தான் விலைவாசி ஏறி விட்டது என்று சமாதானம் சொல்லிப் பார்க்கிறது. அதுவும் ஓரளவு உண்மைதான். ஆனால் எல்லோருடைய வாங்கும் சக்தியும் இன்னம் அதிகரித்து விடவில்லையே. வாங்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள். இந்த காலகட்டத்தில் ஒரு நல்ல ஓட்டலில் சென்று சாப்பிட வேண்டுமானால் 5 இலக்க சம்பளம் வாங்குபவர்களால் மட்டுமே முடியும். மற்றவர்களின் நிலைமை? கையேந்தி பவன்தான்.

Saturday, June 14, 2008

சீனி கம்

சீனி கம்

நேற்று சீனி கம் ஹிந்தி படம் பார்த்தேன். படம் மிகவும் நேர்த்தியாக எடுக்கப் பட்டிருந்தது. சினிமா பாணியில் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக இருந்த வசனங்கள்தான் படத்துக்கு மிகப் பெரிய பலம். நான் சாதாரணமாக ஹிந்தி படங்கள் பார்ப்பதில்லை. இந்த படம் நல்ல Review பெற்றிருப்பதால் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். Subtitle இருந்ததால் நன்றாக படம் புரிந்தது.

அமிதாப்பின் மிகப்பெரிய பலம் அவர் அவரை நன்றாக உணர்ந்திருப்பதுதான். அவர் வயதிற்கு ஏற்ற வேடம், அவருக்கே இயற்கையாக உள்ள நையாண்டி கிண்டல் இந்த படத்தில் நிறையவே உண்டு. தபு மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். மிக இயல்பான நடிப்பு.

இந்த படம் இயக்குனர்க்கும் வசனக்கர்த்தவுக்கும் முதல் படம் என்று சொல்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய படைப்பு.

மொத்தத்தில், அனைவரும் பார்க்க அல்லது பார்த்திருக்க வேண்டிய படம்.

Tuesday, June 10, 2008

இன்று என் பிறந்தநாள

இன்று இரண்டு காரணங்களுக்காக சிறப்பான நாள். ஒன்று என் பிறந்தநாள். இன்னொன்று இதுதான் நான் முதல்முறையா கொண்டாடும் பிறந்தநாள். நாம் பிறந்தது முதல் என்ன சாதித்துவிட்டோம் பிறந்தநாள் கொண்டாட என்ற எண்ணம் தான் என்னை இது நாள் வரை இது பற்றி சிந்திக்காமல் இருக்க செய்தது.
.
பெரிய தலைவர்கள் பிறந்தநாள் கொண்டாதும்போது அவர்களுக்காக இந்த நாடே கொண்டாடுகிறது. குறைத்தபட்சம்அவர்களை சார்ந்த ஒரு கூட்டம் மட்டுமாவது கொண்டாடுக்கிறது. ஆனால் நாம் கொண்டாட வேண்டுமானால் நாமே தான் கொண்டாடிக் கொள்ளவேண்டும். அந்த வெறுப்புததான் - வேறொன்றுமில்லைஆனால் இந்த முறை இது சற்று வித்தியாசமாக அமைந்தது. காலை நான் வழக்கம் போல நடைபயிற்சிக்குப் போய் விட்டேன். திருன்பி வந்து பார்த்தபோது மிஸ்ட் கால்ஸ் இருந்தது. சிறிது நேரம் கழித்துத்து கால் வந்தது, என் வருங்கால மாமனார் வீட்டிலிருந்து. பிறகு அவர்களே மீண்டும் தொலைபேசியில் அழைத்து அனைவரும் வாழ்த்து சொன்னார்கள். பிறகு வழக்கம் போல ஆஃபீஸ் போய்விட்டேன். சிறிது நேரம் வேலை செய்து விட்டு, அம்மாவிற்கு நானே போன் செய்து விவரம் சொல்லி வாழ்த்து பெற்றேன். அப்பறம் சாயங்காலம் அலுவலக நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஒரு சட்டை பரிசளித்தார்கள். யாரோ சிலர் நாம் பிறந்த நாளை கொண்டாடுவது என்ற அனுபவம் மிகவும் பரவசமாக இருந்தது. அவர்கள் என் பெற்றொல்கள் இல்லை. சொந்தம் இல்லை. இருந்தபோதும் கொண்டாடினார்கள். எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு வந்த நன்றாக குளித்து விட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று மணமுறுக வேண்டினேன். மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது. அப்படியே உணவகம் சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

அவ்வளவுதான், இன்றைய பொழுது. இதை டைப் அடித்துவிட்டேன், இப்போ போய் தூங்க போறேன்.

திருநங்கைகள்

இரண்டு வருடம் முன்பு முதல் முறையாக மும்பை சென்ற பொது, திருநங்கைகளால் பயணம் மிகவும் கசப்பானதாக அமைந்துவிட்டது. அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிரிந்த போதும் அதிகம் நான் அவர்களை பார்த்ததில்லை. சில நண்பர்கள் முன்னரே என்னை எச்ச்சரிதிருந்தனர். சென்னை -இல் இருந்து புறப்பட்டு ரயில் ஆந்தரபிரதேஷ் செல்லும்போது ஒவ்வரு கூட்டமாக வர ஆரம்பித்தனர். ஒவ்வருவரும் வந்து அங்கிருந்த இளம் ஆண்களிடம் பணம் கேட்டு இம்சை செய்தனர். என் கம்பார்மேன்டில் நிறைய பெண்கள் இருந்ததால் பெரும்பாலும் அவர்கள் அங்கு நின்று பணம் கேட்கவே இல்லை. வண்டி பூனே சென்றவுடன் என் கம்பர்ட்மேன்டில் இருந்த அனைவரும் இருங்கிவிட நான் மட்டும் தனியாக மாட்டிக்கொண்டேன். சும்மா தூங்குவது போல கொஞ்சம் நேரம் நடித்து பார்த்தேன். பயனில்லை - என்னை எழுப்பி பணம் கேட்டார்கள். ஒரு கும்பல் பணம் கேட்டு ரொம்ப தொந்தரவு செய்யவே நான் பணம் தர முடியாது என்று சொன்னேன்.

"ஏய்! நாங்கெல்லாம் தமிழ் பொண்ணுக. காசு குடு." ஒரு திருநங்கை ஆரம்பித்தது.

"என்னது? தமிழ் பொண்ணுங்களா? இப்படி சொல்லி எங்க ஊர் பொண்ணுங்கள கேவலை படுத்தாத." இது நான்.

"ஏய்! எப்ப நீன் பணம் கொடுக்கல, நான் புடவைய அவுதுடுவேன்" இது அவள் (அல்லது) அவன்.

"ச்ச்சீ கருமம் போய்த் தொலை" திட்டிப் பார்த்தேன்.

"பணம் வாங்காம போக முடியாயது. இப்ப பணம் தர பொரிய இல்லம் முத்தம் கொடுகட்டுமா?"

அந்த முகம் என்னை நோக்கி வாரம் ஆரம்பித்தது. உதடு முழுக்க உதட்டு சாயம். நான் இப்போ கொஞ்சம் பயந்துட்டேன்.

"சரி சரி பணம் தாரேன். ஆனா கொடுத்த பிறகு இந்த இடத்த விட்டு ஓடிப்போகனும்? OK வா?" கண்டிஷனுடன் பாக்கேட்டுக்குள்ள கையை விட்டேன். வெறும் ஒரு ரூபாய் தான் இருந்தது. தைரியமா எடுத்து கொடுத்தேன். ஒரு நங்கை மிகுந்த கோபத்துடன்

"ஏன்டா? பேண்டு சட்டையெல்லாம் போட்டுருக்கேள்ளே? வெறும் ஒரு ரூபா கொடுக்கற?" என்று சொல்லி மறுபடியும் அவர்களுடைய முத்தம் ஆயுதத்தை எடுத்தார்கள். நான் பயந்து இன்னுரு அஞ்சு ரூபா கொடுத்தேன். ஆகா ஆறு ரூபாயோடு அந்த eipisode முடிந்தது. என்ன செய்வது.

எத்தனயோ மனித உரிமை காவலர்கள் இவர்களுக்காக குரல்கொடுத்து கொண்டு இருக்கும்போது, இவர்கள் இப்படி நடந்து கொண்டால், இவர்கள்மீது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இரக்கமும் போய்விடும். இவர்களின் அட்டூழிங்களை போலீஸ் கண்டுகொள்ளாமல் விட்டால், ரயில் பயணம் ஒரு nightmare - அக போய்விடும்.

Saturday, June 7, 2008

"காத்தவராயன்" - Review

நேற்று "காத்தவராயன்" படம் பார்க்க சென்றிருந்தேன். படம் பார்த்து முடித்த பிறகு, இதை blog -இல் எழில்தியே ஆக வேண்டுமென முடிவெடுத்தேன். காரணம்? - யாம் பெற்ற இன்பம் பிறர் பெறலாம். துன்பமும் பெற வேண்டுமா? கரண் நடித்தே முந்தைய இரண்டு படங்களும் ஓரளவு எனக்கு பிடித்தால் இந்த படத்துக்கு நம்பி போனேன் . சரியான ஏமாற்றந்தான் மிஞ்சியது. கரனின் நடிப்பு கொஞ்சம் பரவாயில்லை. மற்றபடி இந்த படத்தில் ஒரு மண்ணும் இல்லை. கதாநாயகியாக வரும் நடிகையை எங்கேயிருந்து பிடித்து கொண்டு வந்தாங்களோ தெரியல. சும்மா ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை நடிக்க வச்சிருக்கலாம். அதுவாவது, தலைய ஆட்டிருக்கும். இவருக்கு அது கூட தெரியல.

வடிவேலு என்ன என்னவோ செய்து பார்க்கிறார். ஆனால் நமக்குத்தான் சிரிப்பே வர மாட்டேங்குது. என்ன பண்றது? வடிவேலு வந்தாலே போதும், வேறு எதுவும் வேண்டாம், மக்கள் சிரிப்போ சிரிப்புன்னு சிரிப்பாங்கன்னு நினைக்கிறது முட்டாள்தனம் என்பது இப்போ புரிஞ்சுருக்கும். காமெடி சிறப்பு வரானமுன்னா அந்த script ஒழுங்கா வந்திருக்கணும். ஆனா, எல்லாமே சொதப்பலா முடிஞ்சிடுச்சு. ஒரு முழு நீல நகைச்சுவை படமா வந்திருக்கு வேண்டிய படம், இவர் பண்ணு சொதப்பள்ள, ஒரு சொதப்பல் படமா அமைஞ்சிடுச்சி.

படத்துல, எல்லா கேரக்டருமே எதோ கடமைக்கு நடிச்சி முடிச்சிட்டு அடுத்த ஷூட்டிங் லேட் ஆகறது போல ஓடுறாங்க. வில்லன் நடிகரை நாம் பல படங்களில் சாதரண அடியால் வேஷத்தில் பார்த்ததால், இங்கே அவர் சுத்தமா எடுபடவே இல்லை.

மத்தபடி, எனக்கு படம் பார்க்கும்போது, தூர்தர்ஷனில் செவ்வாய்க்கிழமை வரும் நாடகம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

சமீபத்தில் வந்த உருப்படாத படத்துக்கான award "துள்ளல்" படத்துக்கு அப்பறம் இந்த படதுக்குதன் கொடுக்கனு. இதற்கடுத்து, சுந்தர் நடித்த "சண்டை".