நினைத்தேன் எழுதுகிறேன்: மைனா

Sunday, November 14, 2010

மைனா

எப்போதோ  எதோ ஒரு படம்தான் நம் படம் பார்த்து வீட்டுக்கு வந்தபின்னும் அதை பற்றியே நினைக்க தூண்டுவதுண்டு. அந்த கதாப்பாத்திரங்கள் மனதை விட்டு நகராது. அது போல சில படங்கள்.... சேது, சுப்ரமணியபுரம், பருத்திவீரன். இப்போது அந்த வரிசையில் மைனா. பதிவுலகதிலும் ஊடகத்திலும் நல்ல review கொடுததினாலேயே படத்துக்கு போனேன். படம் பார்த்து வரும்போது வாயடைத்து போய்விட்டேன். இந்த படம் பார்த்துவந்த பின்பும் அதன் காட்சிகளே என்கண்முன் வந்து போகின்றது. இது இப்படி ஆகியிருக்க கூடாதோ, அப்படி ஆகியிருக்க கூடாதோ என்று மனம் வேண்டுகிறது. அப்படி என்னை நினைக்க வைத்ததுதான் இயக்குனரின் திறமை என்று நினைக்கிறேன்.

படம் முழுக்க இயற்கையான மெல்லிய கதையோடு வரும் நகைச்சுவை. இதுதான் படத்துக்கு பெரிய பலமே. சில நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவுடன் வரும் தம்பி ராமையா இதில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் இடைவேளையின் பொது வரும் இவர் அந்த படத்தின் முதுகெலும்பு என்றால் மிகையாகாது. பெரிய star value இல்லாத நடிகர்களை வைத்து ஒரு சிறந்த படம் எடக்க முடியும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

பிரபு சாலமன் தன்னுடைய நான்காவது படத்தில்தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார். இந்த படத்திற்காக அவர் பெயர் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.

நல்ல படம் பார்க்க விரும்புவர்கள் பார்க்க வேண்டிய படம்.

3 comments:

Muruganandan M.K. said...

பார்க்க வேண்டியதுதான் என்பதை உங்கள் பதிவு உறுதிப்படுத்தியது.

Anonymous said...

ரொம்ப நல்ல படம் இது போன்ற படங்கள் அதிகம் தேவை

Unknown said...

வருகைக்கு நன்றி Dr. மற்றும் சதீஷ்குமார்.