நினைத்தேன் எழுதுகிறேன்: அச்சமுண்டு அச்சமுண்டு - பட விமர்சனம்.

Saturday, July 25, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - பட விமர்சனம்.

இது கடைசியா நான் பார்த்த படம். பேய் படமா இல்லை Thriller படமா என்று தெரியாமலேயே போனேன். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் வரைக்கும் என்ன விதமான படம் என்றே தெரியவில்லை. அமெரிக்காவில் வாழும் ஒரு தம்பதியரின் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை படம் சொல்லிக் கொண்டே போகிறது படத்தின் முதல் பாகம். பிரசன்னா, சினேகா அவர்கள் குழந்தை, அவர்களது புது வீடு, மற்றும் பிரசன்னாவின் அலுவலகம். இப்படியே மாற்றி மாற்றி காண்பித்து கொண்டிருக்கும்போது ஒரு திடீர் திருப்பம்.

அவர்கள் வீட்டுக்கு Paint அடிக்க வரும் Painter குழைந்தைகளை கடத்தி செல்வபவன். அவன் எப்படி அந்த குழந்தையை கடத்த முயல்கிறான், அந்த முயற்சியால் வென்றானா இல்லை தோற்றானா என்பதுதான் மீதி கதை.

ஒரு குழந்தைக்கு அம்மா அப்பாவாக நடிக்க முன்வந்த சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் வாழ்த்துக்கள். படம் கொஞ்சம் போர்தான் என்றாலும் இரண்டாம் பாகம் ரசிக்க முடிகின்றது. அந்த அமெரிக்க வில்லன் மிரட்டியிருக்கிறார். அபாரமான நடிப்பு.
இந்த படம் கமர்ஷியலா ஜெயிக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான் என்றாலும், நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். படம் முடியும்போது ஒரு டாகுமெண்டரி படம் பார்த்த அனுபம்தான் ஏற்படுகிறது. "Children are not safe even at home" என்று புரியவைக்கிறார்கள். உண்மைதான்.

No comments: