நினைத்தேன் எழுதுகிறேன்: தனிமை விரும்பி

Saturday, July 25, 2009

தனிமை விரும்பி

தனிமை எவ்வளவு கொடுமை என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். ஆனால் நான் இதில் சற்று விதிவிலக்கு. எனக்கு தனிமைதான் மிகவும் பிடிக்கும். நான் ஒரு தனிமை விரும்பி. கடந்த ஏழு வருடங்களில் (கடைசி ஒரு வருடம் தவிர) குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்ததால் என்னவோ, அதுவே பழகிப் போச்சு. சிலபேர் என்னை ஆச்சர்யமாக கேட்டதுண்டு எப்படி தனிய இருக்க முடிகிறதென்று.

நான் தனியாக இருக்கும்போது பற்பல எண்ணங்கள் என்னைத் தாண்டி செல்வதுண்டு. அவை பெரும்பாலும் கடந்த சில தினங்களில் நடந்தவைகளின் அசைபோடுதலாக இருக்கும். சில சமையும் தேவை இல்லாததை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டு இருப்பதும் உண்டு. நான் செய்ய நினைத்து செய்ய முடியாமல் போனவையெல்லாம் சிலசமயம் மனதில் தோன்றும்.

முடிந்தவரை நான் மனதை கட்டுப் படுத்தி வைத்துக் கொள்ள முயற்சி செய்வதுண்டு. செய்து கொண்டும் இருக்கின்றேன்.

(பதிவு போட்டு ஒரு வருஷம் ஆயிடுத்து. அதான் சும்மா எதாவது எழிதிக் கிருக்க்கலாம்முன்னு.... :) )

No comments: