நாட்டில் பணவீக்கம் 8.71% ஆக உயர்ந்து விட்டது. அது பற்றி யாருக்கும் கவலையில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒட்டு மட்டும்தான் முக்கியம். விவசாயிகளுக்கு 60,000 கோடி ரூபாய் தள்ளுபடி. நல்ல விசயம்தான். ஆனால் இது பல சிக்கலை கொடுக்க வல்லது. இரண்டு பேர் ஒரே நேரத்தில் கடன் வாங்குகிறார்கள். ஒருவன் சரியாக பணத்தை திருப்பி கட்டி விடுகிறான். இன்னொருவன் வேண்டுமென்று கட்டாமல் இருக்கிறான். இந்த நேரத்தில் அரசு சலுகை அறிவிக்கிறது. இப்போது பணத்தை ஒழுங்காக திருப்பி கட்டியவன் ஏமாளி, முட்டாள் என்று முத்திரை குத்தப் படுகிறான். கட்டாதவன் புத்திசாலி. அடுத்த முறை கடன் வாங்குபோது, யாரவது திருப்பி கட்டுவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்? சரி இந்த பணத்தை வங்கிகளுக்கு திருப்பி கொடுக்க அரசு அதாவது திட்டம் வைத்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. 3 வருடத்துக்கு பாண்டு போட்டு தருவார்களாம். அதாவது கடன் பத்திரம். அதை ஏன் இவர்கள் நான்கு வருடம் ஆண்டு விட்டு இப்போது செய்தார்கள். ஏனென்றால் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியுமா என்று தெரியாது. நாம் வந்தால் எப்படியாவது சமாளித்து மறுபடியும் ஒரு கடன் பத்திரம் கொடுத்து விடவேண்டியதுதான். பா.ஜ.கா. ஆட்சியை பிடித்தால் கடன் தொல்லை தாங்க முடியாமல் நாடு திவலாகட்டும். பா.ஜ.கா. வினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று பெசலாம். இப்படி பல திட்டம் போட்டு இந்த நாசகார வேலையை இந்த அரசு செய்து முடித்திருக்கிறது. இது மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் சேர்ந்து எடுத்த முடிவாக என்னால் நம்ப முடிய வில்லை. அவர்கள் இருவரும் பொருளாதார மேதைகள். அவர்கள் இதை செய்ய துணிந்திருக்க மாட்டார்கள். இது முழுக்க முழுக்க சோனியா அம்மையாரின் உபயம்.
இது மட்டுமல்ல இந்த விலைவாசி உயர்வுக்கும் பணவீக்கதிற்கும் காரணம். இந்த IT துறை ஒரு முக்கிய காரணம். மற்ற துறைகளில் பல வருடம் உழைத்த பிறகு கிடைக்கும் சம்பளம் இன்று சாப்ட்வேர் துறையில் காலேஜ் முடித்தவுடன் முதல் மாதமே கிடைக்கிறது. ஆனால் மாற்ற துறைகளில் இன்னும் சம்பள விகிதம் அப்படியேதான் இருக்கிறது. இந்த I T காரர்களால், மற்றவர்கள் நகர எல்லையில் கூட இருக்க முடிவதில்லை. வாடகை அந்த அளவுக்கு ஏறிப் போய்விட்டது. வீடு வாங்குவதென்பது பலருக்கு ஒரு கனவாகவே பொய் விட்டது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பலராலும் இது வானுயுரத்துக்கு போய்விட்டது.
ஆனால் அரசோ மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகமாக பொய் விட்டது. அதனால்தான் விலைவாசி ஏறி விட்டது என்று சமாதானம் சொல்லிப் பார்க்கிறது. அதுவும் ஓரளவு உண்மைதான். ஆனால் எல்லோருடைய வாங்கும் சக்தியும் இன்னம் அதிகரித்து விடவில்லையே. வாங்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள். இந்த காலகட்டத்தில் ஒரு நல்ல ஓட்டலில் சென்று சாப்பிட வேண்டுமானால் 5 இலக்க சம்பளம் வாங்குபவர்களால் மட்டுமே முடியும். மற்றவர்களின் நிலைமை? கையேந்தி பவன்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment